Iru Desama! Oru Desama!! / இரு தேசமா! ஒரு தேசமா!!

  • ₹ 275.00
  • Save ₹ 7400


“காதல்-அரசியல்-போர்” இம்மூன்றையும் இணைத்து ஒரு புதினம் படிக்க வேண்டுமென்றால் இப்புதினத்தை படிக்கலாம். மேற்கூறிய மூன்றையும் சரியான அளவு பங்கிட்டுக் கொடுத்திருக்கிறேன் என்ற நம்பிக்கையை உங்களுக்கு என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

காதல் – தொடக்கத்திலும் இறுதியிலும் இனிக்கும் நடுவில் கசக்கும். கசப்பை புறம்தள்ளி இனிப்பை மட்டும் இப்புதினத்தில் இனிக்க வைத்துள்ளேன், உங்கள் மனம் இனிக்க.
அரசியல் – ஏனையோருக்கு சற்று கசக்கும் சிலருக்கு முகம் சுளிக்கும். முகம் சுளிக்காமல் புருவத்தை உயர்த்தி சிந்திக்க வைக்கும் இடைக்காலத்து அரசியலை இடையிடையே இணைத்துள்ளேன் இப்புதினத்தில்.
போர் – குருதி, சோகம், வலி, கொடூரம், வீரம், தியாகம் முதலியவற்றை கொண்டது. குருதியற்ற போரைக் கொடூரமற்ற முறையில் பல வியூகத்தில் வியூகம் அமைத்து வீரத்துடன் வித்திட்டுள்ளேன் இக்கதையின் மூலம்.

நான் தமிழகத்திலிருந்து ஓமன் நாட்டிற்கு வந்தவுடன் பல மாற்றங்கள் என்னுள் மட்டுமல்ல இரு ஆட்சி அரசியலிலும் கண்டேன். இவ்வுலகில் நான் கண்ட இரு ஆட்சி முறை, அரசியல் வித்தியாசத்தின் தொடக்கம் எப்படியிருந்திருக்கும் என்ற நினைப்பு என்னுள் ஏற்பட்டது. அதனைக்கொண்டு ஒரு புதினத்தைப் புனைய நினைத்தே இப்புதினத்தை புனைந்துள்ளேன்.
ஆட்சி மாற்றத்தின் தாக்கங்கள் பலவற்றை இப்புதினத்தில் கொஞ்சம் காதல் கொஞ்சம் போர் மற்றும் அரசியலை இணைத்து எழுதியது தான் இப்புதினம்.
நமது இரு கதாநாயகனின் தேசம் காதல் மற்றும் ஆட்சி முறை கொள்கைகளும் எப்படி வேறுபட்டிருக்கு அதனால் அவர்களிடயே ஏற்படும் மாற்றத்தின் முடிவு என்ன என்பதை அழகாய் மேற்கூறிய மூன்றையும் தகுந்த இடத்தில் படிக்கத் திகட்டாதளவிற்கு உங்களுக்கு ஒரு இனிய பயணமாக அமையும் வகையில் படைத்துள்ளேன் இந்த “இரு தேசமா! ஒரு தேசமா!!” என்ற புதினத்தை.

நன்றியுடன்,
க.பிரபு தமிழன்


About the Author: “மகன், மாணவன், பொறியாளன், கணவன், தந்தை, பொழுதுபோக்கு நிழற்பட கலைஞன் (தெரிந்தோ தெரியாமலோ எட்டு நிகழ்நிலை (ஆன்லைன்) விருதுகளைப் பெற்றிருக்கிறேன்), கடந்த ஐந்து ஆண்டுகளாக எழுத்தாளராக உருவெடுத்துள்ளேன்” உங்கள் வாழ்த்துக்கள் என்றும் எனக்குக் கிடைக்குமென்ற நம்பிக்கையில் நன்றியுடன் – க. பிரபு தமிழன்.

 

  • Paperback: 324 pages
  • Publisher: White Falcon Publishing; 1 edition (2019)
  • Author: K. Prabu Tamizhan
  • ISBN-13: 9789389530308
  • Product Dimensions:  13.9 x 1 x 21.5 cm

Indian Edition available on:

   


We Also Recommend